அரையிறுதி தோல்வி.. இந்தியாவை கிண்டலடித்து வாங்கிக்கட்டிக்கொண்ட பாலிவுட் பிரபலம்!!

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியை தழுவி வெளியேறியதற்கு கிண்டலத்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.

உலகக்கோப்பை தொடரை இந்தியா நிச்சயம் வெல்லும் என பலர் கனவு கொண்டிருந்தர். பல நாட்டு கிரிக்கெட் வல்லுனர்களும் இந்தியாவை கோப்பையை வெல்லும் அணியாக கணித்தனர். ஆனால், அதிர்ச்சி தரும் விதமாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. தோல்வியை தழுவியதற்கு பலரும் இந்தியாவை விமர்சித்தனர்.

இருப்பினும், இறுதிவரை போராடிய தோனி மற்றும் ஜடேஜா இருவருக்கும் அவர்களின் போராட்ட குணத்திற்காக மோடி, ராகுல் காந்தி முதல் அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் இந்திய அணியை நம்பிய ரசிகர்களை வீடியோ ஒன்றின் மூலம் கிண்டலடித்து பாலிவுட் பிரபல நடிகர் மற்றும் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவருமான விவேக் ஓபராய் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் மீண்டும் கீண்டலத்தனர் ரசிகர்கள். மற்றும்  சிலர், போராடி தோற்ற இந்திய அணியின் சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் இப்படி அவமரியாதை செய்வது முறையானது அல்ல என விமர்சனமும் தெரிவித்தனர்.

விவேக் ஓப்ராய் பதிவு:

ரசிகர்களின் பதிலடி 

இவருக்கும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு முன்பு காதல் இருந்ததும், அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டது இவரின் இப்படி கீழ் தனமான செயலே காரணம் என்றும் ரசிகர்களும் உச்சவரம்பை மீறி பேசினார். கிண்டலுக்காக இப்படி உச்சவரம்பை மீறுவதும் சரியாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Prabhu Soundar:

This website uses cookies.