இங்கிலாந்தை எதிர்கொள்ள இதுதான் சிறந்த அணி: விவிஎஸ் லட்சுமனன் லெவன்

இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இந்த அணிதான் மிகச் சிறந்த அணி என தனது ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளார் முன்னாள் வீரர் லட்சுமணன்.

இங்கிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது கடினம்தான் என்றாலும், கோலியின் தலைமையிலான அணியால் செய்ய முடியாது என்று கூற முடியாது என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள்,டி20 போட்டிகளில் விளையாடியது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட்போட்டித் தொடரில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3-வது போட்டியில் இந்திய அணியும் வென்று 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், கடந்த 1936-37-ம் ஆண்டு இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதன்பின் வீறுகொண்டு எழுந்த ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும் வென்று 3-2 என்று டெஸ்ட் போட்டித் தொடரை கைப்பற்றி, கோப்பையை அள்ளிச் சென்றது. அதன்பின் இப்போதுவரை இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட எந்த அணியும் முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்து அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளையும் வென்றதாக வரலாறு இல்லை.

அந்த புதிய வரலாற்றைக் கோலி தலைமையிலான இந்திய அணி படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் தனியார் சேனல் ஒன்று கேள்வி எழுப்பியது அதற்கு அவர் பதில் அளிக்கையில், ”வெல்ல முடியாத அளவுக்கு இங்கிலாந்து அணி ஒன்றும் பெரிய அணி அல்ல. முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்து அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ந்து வென்று3-2 என்று தொடரைக் கைப்பற்றுவது என்பது கடினமான செயல்தான். ஆனால், கோலி தலைமையிலான இந்திய அணியால் அது நிச்சயம் முடியும். அது நிகழ்த்தமுடியாத செயல் ஒன்றும் அல்ல.

 

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் XI (1993 முதல் 2018 வரை):

விரேந்தர் சேவாக், முரளி விஜய், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி (கேப்டன்), தோனி (கீப்பர்), விராட் கோலி, அனில் கும்ப்ளே, புவனேஷ்வர் குமார், ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான்.

Vignesh G:

This website uses cookies.