நீ ஒழுங்கா ஆடு.. இல்லைனா அந்த பையனுக்கு வழிவிட்டு – ரிஷப் பண்ட்டை விளாசிய ஜாம்பவான்!

“கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நன்றாக ஆடி நிரூபித்து காட்டு.. இல்லையெனில் அடுத்து வரும் வீரர்களுக்கு வழிவிடு” என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன்.

ஒரு வருட காலமாக ரிஷப் பண்ட்டுக்கு அதிக அளவிலான வாய்ப்புகளை இந்திய அணி நிர்வாகம் அழித்து வந்துள்ளது. ஆனால் அவர் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் நன்கு ஆடிவந்த ரிஷப் பண்ட் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, மற்றும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆகிய தொடர்களில் சொதப்பியதால் மீண்டும் விருத்திமான் சஹா விற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருந்து வருகிறார். ஆனால் இதிலும் அவரது செயல்பாடு ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இல்லை. தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

உலக கோப்பையிலும் இவருக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் ஒரே மாதிரியான ஷாட்களுக்கு ஆட்டமிழந்தது அனைவரையும் ஆத்திரமடையச் செய்தது. இவரின் சமீபத்திய செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் ‘மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டு இருப்பது ரிஷப் பந்த்துக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.  ஏனெனில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை பண்ட் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் அணிக்குள் இருந்தாலே ஒருதுருப்புச் சீட்டுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

ரிஷப் பந்த் பலமுறை பல்வேறு விதமான மனநிலையில் களமிறங்கி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.ஆனாலும் அவர்தான் விக்கெட் கீப்பர் தேர்வில் முன்னிலையில் இருக்கிறார். கூடிய சீக்கிரம் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் அல்லது சஞ்சு சாம்சனுக்கு வழிவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளர்.

Prabhu Soundar:

This website uses cookies.