வி.வி.எஸ் லக்‌ஷ்மணை புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட் !!

வி.வி.எஸ் லக்‌ஷ்மணை புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட் !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முன்னாள் வீரர் லக்‌ஷ்மண்  281 ரன்கள் எடுத்த போட்டி இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள அனைத்து போட்டிகளையும் விட சிறந்தது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் சமீபத்தில் அளித்த  பேட்டி ஒன்றில் பேசியதாவது, ’கிரிக்கெட் போட்டிகளிலேயே டெஸ்ட் போட்டி தான் சவால் நிறைந்தவை. என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதுதான் மிகப்பெரிய தன்னிறைவை ஏற்படுத்தும். ஒரு வீரரை டெஸ்ட் போட்டி தான் சரியாக சோதிக்கும். டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், திறமை ரீதியாகவும் நமக்கு மிகப்பெரிய சவால்கள் நிறைந்ததாக அமையும்.

நம்மை சோதித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதுதான் மிகச்சரியாக இருக்கும் என இளம் வீரர்களுக்கு எப்போதும் வலியுறுத்துவேன். அது பல வீரர்களுக்கு நிறைவேறுவதில்லை. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது இலக்காக வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்ளன. அவையும் எனக்கும் மிகவும் பிடித்தமானவை, மிகவும் சவால் நிறைந்தவை. இதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ரக போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு விராட் கோலி போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம் ஆவார்கள். ஏனெனில் அது சவால் நிறைந்தது, மிகவும் கடினமானது என்று தெரிவித்தார்.

அதே போல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வி.வி.எஸ் லக்‌ஷ்மண் 281 ரன்கள் அடித்த அந்த இன்னிங்ஸ் இந்திய அணியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் எனவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

கும்ப்ளே ராஜினாமா குறித்து லக்‌ஷ்மண் பேசியதாவது;

நாங்கள் அனைவரும் அணில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர வேண்டும் என்றே விரும்பினோம். அவரிடன் நிறைய முறை இதை வலியுறுத்தவும் செய்தோம் ஆனால் அணில் கும்ப்ளே தனது ரஜினாமாவில் மிக உறுதியாக இருந்தார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் தனது முடிவை மாற்றி கொள்ளாமல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.