2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறங்கிய வீரர்தான் மார்னஸ் லபுஸ்சாக்னே. தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 46 ரன்கள் குவித்தார். மேலும் அத்தோடு நின்று விடாமல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடினார். அதன் காரணமாகவே ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் அவர் 3வது வீரராக தற்போது இருக்கிறார்
மேலும் நடந்து முடிந்துள்ள முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் திகழ்கிறார். மொத்தமாக 1675 ரன்களை அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் குவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 72.82 ஆகும்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சை எதிர்கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன்
இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடப் போவது தற்போது மனதளவில் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார். இரு அணியிலும் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் நிலையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் போட்டி மிக சுவாரசியமாக அரங்கேறும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சை இந்த ஆஷஸ் தொடரில் எதிர்கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன் என்றும் உற்சாகமாக மார்னஸ் லபுஸ்சாக்னே கூறியுள்ளார்.
மூன்று மாதங்களாக எனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறேன்
மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் குடும்பத்தில் உள்ள நபர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. மேலும் அப்படி அனுமதிக்கப்பட்டாலும் தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கு அது சரியாக படவில்லை. கூடிய விரைவில் கொரோனா உலக அளவில் மறைந்து மீண்டும் முன்பு போலவே இயல்பான வாழ்க்கையை மக்கள் அனைவரும் சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று லபுஸ்சாக்னே கூறியிருக்கிறார்.
தனது குடும்பத்தை விட்டு மூன்று மாதங்கள் பிறந்து இங்கிலாந்தில் தற்பொழுது கவுண்ட்டி தொடரில் கிளமோர்கன் அணிக்காக விளையாடி வருவதாகவும், இதற்கு முன் இப்படி மூன்று மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தை விட்டு அவர் பிரிந்து இருந்ததில்லை என்றும் கூறியிருக்கிறார். கூடிய விரைவில் தற்போது உள்ள சூழ்நிலை மாறும் என்றும், பழையபடி மக்கள் அனைவரும் சந்தோஷமாக வந்து போட்டிகளை காண்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.