கிரிக்கெட் உலகக்கோப்பை துவங்க சரியாக ஒருவருடமே இருக்க அனைத்து நாடுகளிலில் இருந்தும் ஆர்வலர்களும் விமர்சகர்களும் தங்களது விருப்ப அணியை தேர்வு செய்ய தொடங்கிவிட்டனர்.
2017ம் ஆண்டு நடந்து சாம்பியன்ஸ் டிராபியை பாக்கிஸ்தான் அணி அதன் எதிரியான இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனால் அந்த அணி மீது பெரும்பாலானோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த அணியை கேப்டன் சர்பிராஸ் அஹமது வழிநடத்தும் விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அண்மையில் லண்டனில் நடந்த உலகக்கோப்பை வெளியீடு நிகழ்ச்சியில் இன்றைய பாக்கிஸ்தான் அணி குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் கருத்து தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ” வருடம் முன்னதாகவே எந்த அணி வெல்லும் என்பதை குறிப்பிடுவது மிகவும் கடினம்.. ஆனால் கடந்த இரு வருடங்களாக பாக்கிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் அற்புதமாக உள்ளது.. இதுவரை பார்க்கையில் பாக்கிஸ்தான் அணியே எனது விருப்ப அணியாக உள்ளது. சர்பிராஸ் சிறப்பாக வழிநடத்துகிறார்” இவ்வாறாக அவை கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மேலும் அவர் கூறியதாவது,” 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையை பைனல் வரை சென்றது. 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலககோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபி போட்டியில் வென்றது. இதனால் பாக்கிஸ்தான் அணியின் செயல்பாடு இங்கிலாந்தில் மிகவும் சிறப்பாக உள்ளது”.
இந்த முதல் டெஸ்ட் வெற்றி மேலும் அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா இதை வழிமொழிந்துள்ளார்