வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க உலக அளவில் ஆங்காங்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளும் வகையில் சினிமா பிரபலங்களும், விளையாட்டு பிரபலங்களும் தங்களின் ரசிகர்களோடு உரையாடுவது, வீடியோ செய்து வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து தான் போயிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் அடங்க மாட்டேன் என்று கூறுகிறார். கொரோனா வைரசால் உலகமே முடங்கினாலும் இவர் முடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். தனது டிக்டாக் வீடியோக்களால் தொடர்ந்து அலப்பறைகளை செய்து வருகிறார்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகிறார். இந்த வீடியோக்களில் எப்போதுமே ஒரு புதுமை இருக்கும். இவரது அப்பாவித்தனமான முகபாவனைகள், அதிலும் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் பிரபல பாடல்களையும் இவர் விட்டு வைப்பதில்லை. இவை அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


அக்ஷய் குமாரின் பாடலுக்கு ஆட்டம்போட்டு, டிக்டாக் வீடியோ வெளியிட்ட இவர், விராட் கோலியும் அவ்வாறு தன்னுடன் இணைந்து வீடியோ வெளியிட அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து எதிர்காலத்தில் தான் அதை செய்யவிருப்பதாக சமீபத்தில் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ் பாடல் ஒன்றிற்கு வார்னர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் செய்த பல்வேறு டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அத்தகைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடலை கையில் எடுத்துள்ளார்.

 

Sathish Kumar:

This website uses cookies.