வார்னர் டக்அவுட் ஆயிட்டான்னு சந்தோஷப் படுங்கடா… அவன் இருந்த இன்னும் 50 ரன்கள்ல காலி ஆகிருப்பீங்க – வார்னரை வெளுத்து வாங்கிய முன்னாள் இந்திய வீரர்!!

வார்னர் டக்அவுட் ஆனது டெல்லி அணிக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி தான். அவர் ஆடியிருந்தால் நிறைய வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் டெல்லி அணி 198 ரன்கள் இலக்கை துரத்தியது. அப்போது டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

இது டெல்லி அணியை பெரிதளவில் பாதிக்கவில்லை. ஏனெனில் இரண்டாவது விக்கெட் இருக்கு பில் சால்ட்(59) மற்றும் மிட்ச்சல் மார்ஷ்(63) இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விதத்தினால் 10 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்களை கடந்தது.

இரண்டாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 112 ரன்கள் சேர்த்தது. பின்னர் பில் சால்ட் ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களில் மிட்ச்சல் மார்ஷ் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த மனிஷ் பாண்டே, சர்பாராஸ் கான், பிரியம் கார்க் ஆகிய டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 198 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 188 ரன்கள் மட்டுமே அடித்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டி முடிந்த பிறகு பேசிய டேவிட் வார்னர், “நாங்கள் பந்து வீச்சில் சரியாக செயல்படவில்லை. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை.” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பு மற்றும் இந்த தொடர் முழுவதும் அவர் பேட்டிங் செய்த விதம் பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ஹர்பஜன் சிங். முதலில் ஹர்பஜன் சிங் பேசியதாவது,

“இதற்கு மேலும் டெல்லி அணி இந்த தொடரில் கம்பேக் கொடுக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. இதற்கு முழு முக்கிய காரணம் டெல்லி அணியின் கேப்டனாக இருப்பவர் தான். டேவிட் வார்னர் விரைவாக ஆட்டமிழக்காமல் பேட்டிங் செய்திருந்தால் ஹைதராபாத் அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவி இருந்திருக்கலாம். 50 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வீணடித்திருப்பார்.

இந்த தொடர் முழுவதும் அவர் தனது தரத்திற்கு பேட்டிங் செய்யவில்லை. 300 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்கள். அதில் எந்தவித முனைப்பும் இல்லை. தோல்விக்கு இவர்தான் முழு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் போட்டி முடிந்த பிறகு பேட்டி அளிக்கையில் மற்றவர்களை காரணம் காட்டுகிறார். அவர்கள் செய்த தவறுகள் தான் தோல்விக்கு காரணம் என்கிறார்.

இவ்வளவு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால், வெற்றிக்கு பேட்டிங்கில் முனைப்பு காட்டாமல் விளையாடினால் எப்படி அணியால் வெற்றி பெற முடியும். டேவிட் வார்னர் கண்ணாடியை பார்த்து டெல்லி அணியின் தோல்விக்கு யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.” என்று பேசி உள்ளார் ஹர்பஜன் சிங்.

Mohamed:

This website uses cookies.