வார்விக்ஷைர் டாம் ரிச்சர்ட் 100 வயதில் மரணம் அடைந்தார்

100 வயதான முன்னாள் வார்விக்ஷைர் கிரிக்கெட் வீரர் டாம் ரிச்சர்ட் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று மரணம் அடைந்தார். 1940 மற்றும் 1950 இல் விளையாடிய அவர் 200 போட்டிகளில் பங்கேற்று 818 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

நியூஸிலாந்தில் பிறந்த அவருக்கு 1937 இல் 20வது வயதில் அவருடைய நாட்டுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இரண்டாம் உலக போர் காரணமாக அந்த தொடரே நடக்கவில்லை. 1948இன் போது 172 விக்கெட் எடுத்திருந்த அவர் 1949-இல் இங்கிலாந்துடன் விளையாடப்போகும் தொடருக்கு அவரை அணியில் சேர்க்கப்பட்டது. மீண்டும், அவரை அழைக்கவில்லை.

ஆனால், இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தொடர்ந்தார். 1948 – 1951 வரை வருடத்திற்கு 100 விக்கெட்டுகளை எடுத்தார். நியூஸிலாந்திற்கு அதிக முதல் தர விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில், டாம் ரிச்சர்ட் 4வது இடத்தில் உள்ளார்.

“என் இளம் வயதில் எனது குடும்பம் கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாத போது, நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன்,” என 100வது பிறந்தநாளின் அன்று ரிச்சர்ட் தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.