இந்த முன்னாள் ஜாம்பவானை போல் என் பையனும் பெரிய ஆளா வருவான்; வாசிங்டன் சுந்தரின் தந்தை நம்பிக்கை !!

இந்திய அணியின் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர், கபில்தேவ் போன்று ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்வார் என்று வாஷிங்டன் சுந்தரின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது இதனை சரியாக பயன்படுத்திய சுந்தர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை சேர்த்து மொத்தம் 3 விக்கெட்களை எடுத்தார். மேலும் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது மிக சிறப்பாக செயல்பட்டு 62 ரன்களை அடித்து அணியின் நிலைமையே மாற்றினார்.


இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாசிங்டன் சுந்தர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். பல கிரிக்கெட் ஜாம்பவான்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இவரை வெகுவாகப் பாராட்டினார்.

இதுபற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு சுந்தரின் தந்தை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, வாஷிங்டன் சுந்தர் 5 வயது இருக்கும்பொழுது தனது கிரிக்கெட் அத்தியாயத்தை தொடங்கினார், நாங்கள் அனைவரும் இவரை ஞானக்குழந்தை என்றுதான் அழைப்போம். அந்த அளவுக்கு அவர் ஐந்து வயது இருக்கும் பொழுது மிகவும் கவனத்துடன் விளையாடினார். மேலும் 17 வயதில் மிகச்சிறந்த வீரராக இவர் திகழ்ந்தார் இவருடைய மனவலிமை மிக சிறப்பாக இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் இறைவனின் அருள் மட்டும் தான் என்று அவர் கூறினார் மேலும் அவர் கூறியதாவது வாஷிங்டன் சுந்தர் இந்தியாவுக்காக மூன்று தொடர்களிலும் இவர் சிறப்பாக செயல்படுவார் மேலும் இவர் கபில் தேவ் போன்று ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.