நான் பார்த்து பயந்த ஒரே பேட்ஸ்மேன் அவர் மட்டும் தான்; வாசிம் அக்ரம் ஓபன் டாக்
தனது கிரிக்கெட் கேரியரில் தான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் மார்டின் க்ரவ் தலைசிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.
வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவருமாக திகழும் வாசிம் அக்ரம், தான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் சிறந்த பேட்ஸ்மேன் என்பது குறித்து ஓபனாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாசிம் அக்ரம் பேசியதாவது;
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு தொடரில் வக்கார் யூனிஸ் 30(29) விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான் 16(10) விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அந்த தொடரில் மார்டின் க்ரோவ் 2 சதங்கள்(1) அடித்தார். அந்த தொடர் முடிந்ததும், நான் அவரிடம் சென்று, உங்கள் பேட்டிங்கின் ரகசியம் என்ன? என்று கேட்டேன்.
அதற்கு, நான் உங்களுடைய பவுலிங்கை ஃப்ரண்ட் ஃபூட்டில் எதிர்கொண்டு ஆட முயற்சிக்கிறேன். இன்ஸ்விங்கர்களை தொடர்ந்து நான் சரியாக ஆடுவதால், அவுட் ஸ்விங்கர்கள் தானாகவே தவறவிடுகிறார்கள் என்று க்ரோவ் எனக்கு பதிலளித்தார் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.