வங்கதேச அணிக்கு புதிய பயிற்சியாளராக இந்திய உள்ளூர் ஜாம்பவான் நியமனம்!!

வங்கதேச அணியின் தற்காலிக பேட்டிங் பயிற்சியாளராக இந்திய உள்ளூர் போட்டிகளின் ஜாம்பவான் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை தொடருக்குப் பிறகு, வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீவ் ரோட்ஸ் பணி காலம் முடிவு பெற்றது. ஸ்டீவ் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுவிட்டார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து, அதற்க்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல் உலக கோப்பை தொடருக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பௌலிங் பயிற்சியாளராக இருந்து வந்த நெயில் மெக்கன்சி மற்றும் கோர்ட்னி வால்ஸ் இருவரின் பணிக்கலாம் முடிவு பெற்றது. இவர்கள் இருவரும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் மேலும் தொடர்வதற்கு இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை.

அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியுடன் இவர்கள் இணைவார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தற்காலிக பேட்டிங் பயிற்சியாளராக இந்திய உள்ளூர் போட்டிகளில் ஜாம்பவான் வாசிம் ஜாஃபர் மற்றும் பௌலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் செம்பக்கா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை இன்று செய்தியாளர்களிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் அக்ரம் கான் வெளியிட்டார். இவர்கள் இருவரும் நிரந்தரமாக நியமிக்கப்படுவது குறித்து ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் அவர் வெளியிட்டார்

வங்கதேச அணிக்கு விரைவில் தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர் இதுகுறித்து கலீட் முகமது இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதையும் குறிப்பிட்டார். விரைவில் கலீட் முகமது நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

.

Prabhu Soundar:

This website uses cookies.