கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவதற்கு காரணம் இவர்தான்! அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் ஓபன் டாக்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவதற்கு காரணம் இவர்தான்! அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் ஓபன் டாக்!

கிங்ஸ் பஞ்சாப் அணி கடந்த 12 வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் தற்போது வரை ஒரு கோப்பையை வென்றதில்லை. ஒரே ஒரு முறை செமி பைனல் போட்டிக்கு சென்றுள்ளது. தொடர்ந்து இவ்வாறு செய்து வருகிறது. அந்த அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சென்ற வருடம் ரவிச்சந்திரன் அஸ்வின் அணிக்கு கேப்டனாக இருந்தார்.

முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்ற அசத்தினார். அதன் பின்னர் கடுமையாக சொதப்பி தொடரில் இருந்து வெளியேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்த வருடம் அஸ்வின் வெளியேற்றப்படு கேஎல் ராகுல் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக உள்ளூர் ஜாம்பவான் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு யார் காரணம் என்பது குறித்து பேசியுள்ளார் வாசிம் ஜாபர். அவர் கூறுகையில்..

கேஎல் ராகுல் நன்றாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும், சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் ஒரு நிலையான மனிதர். ஐபிஎல் தொடரில் கடந்த ஏழு முதல் எட்டு வருடங்களாக ஆடிவிட்டார். அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும். மேலும், சென்ற வருடம் ஒரு சில போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். பஞ்சாப் அணியின் பேட்டிங் தூணும் அவர்தான், விக்கெட் கீப்பராக இருக்கிறார். இதுவும் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் வாசம் ஜாபர்.

Mohamed:

This website uses cookies.