மூன்று பேருமே செம்ம மாஸ்… ஆசிய கோப்பையில் என்னை கவர்ந்த மூன்று வீரர்கள் இவர்கள் தான்; வாசிம் ஜாபர் ஓபன் டாக் !!

ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆசியக் கோப்பையில் வெற்றி பெற தகுதியான அணி என்று கருதப்பட்ட இந்திய அணியின் முகத்தில் கரியை பூசி இறுதி சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

இதில் வெற்றி பெற 0% தான் வாய்ப்பு என்று தொடரின் ஆரம்பத்தில் பேசப்பட்டு வந்த இலங்கை அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை கைப்பற்றி விமர்சித்தார்களை வாயடைக்கும்படி செய்துவிட்டது.

இந்த நிலையில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கும், ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட புதிய இளம் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதில் முதன்முதலாக ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாசை தேர்ந்தெடுத்துள்ளார். ரஹ்மானுல்லா குர்பாஸ் குறித்து வாஷிம் ஜாஃபர் பேசுகையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் என்னை இம்ப்ரஸ் செய்த வீரர் ரஹ்மானுல்லா குற்பாஸ் தான், இவரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இவர் விளையாடிய விதம் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது, மேலும் துபாய் மைதானத்தில் இவருடைய ஆட்டம் சிறப்பாகவே உள்ளது என்று தெரிவித்த ஜாபர் இந்த வரிசையில் மூன்றாவதாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நவாஸை தேர்ந்தெடுத்துள்ளார். முகமது நவாஸ் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணி தோல்வி தழுவியது குறித்து பேசிய வாசிம் ஜாஃபர், பாபர் அசாம் பந்துவீச்சை சிறப்பாக பயன்படுத்தினாலும் இடது கை பேட்ஸ்மேன்களை பயன்படுத்துவதில் சிறிது தவறு செய்துவிட்டார். இருந்த போதும் இந்த தொடர் பாபர அசாமின் சிறந்த கேப்டன்ஷிப்பை காட்டுகிறது என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.