வீடியோ; பாகிஸ்தான் கேப்டனை படு மோசமாக அவமானப்படுத்தும் ரசிகர்கள்
இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடரை முழுவதுமாக இழந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனையும், பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான பாகிஸ்தான் சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் முற்றிலும் இழந்தது, இதனையடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது மீது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் கோபாவேசம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவின் பெரிய கட்-அவுட் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அடித்து, உதைத்துக் கிழிப்பதான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் முதல் நிலை அணி வராமல் 2ம் நிலை அணியே பாகிஸ்தானுக்கு வந்தது, சொந்த மண்ணில் 3-0 என்று பாகிஸ்தான் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.
இதற்கு முன்பாக 2015-ல் யு.ஏ.இ.யில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஒயிட் வாஷ் தோல்வியைச் சந்தித்த பிறகு இது 2வது ஒயிட்வாஷ் தோல்வியாகும்.
கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையின் 148 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் ஹாரிஸ் சொஹைலின் அபாரமான 52 ரன்களுடன் இலக்கு நோக்கிச் சென்றது, ஆனால் இலங்கை லெக் ஸ்பின்னர் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை 21 ரன்களுக்குக் கைப்பற்ற 134-6 என்று பாகிஸ்தான் முடிந்தது.