இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணி கள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகா ராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத் தில் இன்று தொடங்குகிறது.
விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 203 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந் திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கு கிறது.
விசாகப்பட்டினம் டெஸ்டில் இந்திய அணி அனைத்து துறை யிலும் ஆதிக்கம் செலுத்தியது. முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத் தினார். அவரது தொடக்க கூட்டாளி யான மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். இந்த ஜோடி பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தது.
இவர்கள் கொடுத்த வலுவான அடித்தளத்தை தொடர்ந்து பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மொகமது ஷமி ஆகியோரது ஒருங்கிணைந்த திறனால் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தியதுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது வெற்றி சதவீதத்தை அதிகரிக்கச் செய்து கொண்டது.
டு பிளெஸ்ஸிஸ் தலைமை யிலான தென் ஆப்பிரிக்க அணி விசாகப்பட்டினம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்தது. டீன் எல்கர், குயிண்டன் டி காக் ஆகியோர் அற்புதமாக பேட் செய்து 431 ரன்கள் வரை எடுக்க உதவினர். ஆனால் 2-வது இன்னிங்ஸில் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சரணடைந்தது.
மேலும் அந்த அணி பந்து வீச்சில் சுழலை அதிகம் சார்ந்திருந் தது பாதகமாகவே அமைந்தது. செனுரன் முத்துசாமி, டேன் பியட் ஆகியோரது சுழற்பந்து வீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. மாறாக அவர்கள் அதிக ரன்களையே வாரி வழங்கினர். இதனால் இவர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
அணிகள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி, விருத்தி மான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மொகமது ஷமி, இஷாந்த் சர்மா.
தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ் ஸிஸ் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டீன் எல்கர், தெம்பா பவுமா, தியூ னிஸ் டி புரூயின், குயிண்டன் டி காக், ஜுபைர் ஹம்சா, செனுரன் முத்து சாமி, ரூடி செகன்ட், டேன் பியட், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெர்னான் பிலாண்டர், காகிசோ ரபாடா.
யங்க் அகர்வாலும் புஜாராவும் கவனமாக விளையாடி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நன்குச் சமாளித்தார்கள். 15.1 ஓவர்களில் இந்திய அணிக்கு 50 ரன்கள் கிடைத்தன. முதல் ரன்னை எடுக்க புஜாராவுக்கு 13 பந்துகள் தேவைப்பட்டன. மயங்க் அகர்வால் பவுண்டரிகளாக அடித்து தனது ரன்களை உயர்த்தினார்.
முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 34, புஜாரா 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.