வீடியோ: லார்ட்ஸ் டெஸ்ட்க்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு பந்துவீசும் அர்ஜுன் டெண்டுல்கர்!!

லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டாவது டெஸ்டில் மோத இருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியின் போது பந்துவீசிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  நீண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் டி20 போட்டிகளில் இந்திய அணியும், ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றது.

Arjun Tendulkar bowls to Virat Kholi during warm up ahead of their one day game against New Zealand at Wankhade stadium ,Churchgate .
Express photo by Kevin DSouza ,Mumbai 21-10-2017.

அதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. இதற்க்கான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.

13 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து 180 ரன்கள் எடுத்து 194 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 87/7 என்ற நிலையில் தடுமாறிய பொழுது சாம் கரன் அடித்த 63 ரன்கள் அடித்தது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்திய அணி 141/6 என்ற நிலையில் இருந்தது. அடுத்து வந்த ஸ்டோக்ஸ் பந்தில் பாண்டியா மற்றும் கோஹ்லி ஆகியோர் ஆட்டமிழக்க, இந்திய அணி வசம் இருந்த ஆட்டம் மொத்தமாக மாறியது.

இதனால் அடுத்த போட்டியில் போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமன்செய்ய கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. மேலும் பேட்ஸ்மேன்கல் கூடுதலாக பயிற்சி செய்ய வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய நிர்வாகம் முடிவு செய்து சில வேகப்பந்துவீச்சாளர்களையும் வரவழைத்துள்ளது.

இதில், பந்துவீச்சில் பல நுணுக்கங்களை காட்டிய இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து வரவழைக்கப்பட்டு பயிற்சிக்கு பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.

இவர் இலங்கை சென்ற அண்டர் 19 வீரர்கள் அணியில் இடம்பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இவரிடம் பல நுணுக்கங்கள் இருப்பதால் பயிற்சிக்கு பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்.

Vignesh G:

This website uses cookies.