வீடியோ; கோஹ்லிக்கு எதிராக அனல் பறக்க பந்துவீசும் அர்ஜூன் டெண்டுல்கர்
இந்திய அணியின் வலைப்பயிற்சியில் கேப்டன் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசுகிறார். அவருக்கு ரவி சாஸ்திரி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி மெருகேற்றி வருகின்றனர்.
19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி இலங்கைக்கு சென்று விளையாட உள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு, 4 நாட்கள் நடைபெறும் போட்டிகள் 2 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய ஜூனியர் அணியும் இலங்கை ஜூனியர் அணியும் மோதுகின்றன.
இதற்கிடையே அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசி வருகிறார். அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் ஆடும் இந்திய அணி, அதன்பிறகு இங்கிலாந்துக்கு சென்று டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆட உள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிராக நாளை மற்றும் 29ம் தேதி இரண்டு டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காகவும் இங்கிலாந்து தொடருக்காகவும் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ;
இந்த பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசி வருகிறார். இது அவரை மேம்படுத்தி கொள்ளவும் பயன்படும். இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அர்ஜூன் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜூனுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். இது அர்ஜூனுக்கு திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள சிறந்த வாய்ப்புதான்.