கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனின் அசத்தல் ஸ்விங் பந்துவீச்சுக்கு தலைவணங்குவதாக லார்ட்ஸ் மைதானம் ட்வீட் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் கடந்தாண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
தந்தையை போன்று அல்லாமல் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்துவீச்சாளராக உருவாகியுள்ளார். சமீபத்தில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீசிய விடியோப் பதிவுகள் வைரலானது.
இந்நிலையில், இங்கிலாந்தில் புகழ்பெற்ற எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் வீசிய பந்தில், சர்ரே 2-ஆவது லெவன் அணியின் நாதன் டைலி க்ளீன் போல்டான விடியோப் பதிவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அதில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு தலைவணங்குகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்சிசி இளம் வீரர்களுக்கும் – சர்ரே அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரின் வேகப் பந்து வீச்சில் சர்ரே அணி பேஸ்ட்மேன் க்ளீன் போல்ட் ஆவார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. சர்ரே அணியின் வீரர் டெய்லி 4 ரன்கள் எடுத்து விளையாடியபோது, அர்ஜூன் டெண்டுல்கரின் வேகப்பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாராட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். 11 ஓவர்கள் வீசிய அவர், 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார். எனினும் இந்த 11 ஓவர்களில் 4 நோபால்களை வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ரே, செகண்ட் லெவன் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை குவித்துள்ளது. எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் தற்போது 227 ரன்கள் பின்தங்கியுள்ளது.
அர்ஜுன் தனது முதல் விக்கெட்டை சென்ற வருடம் ஜூலையில் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிராக வீழ்த்தினார்.
அர்ஜுனின் தந்தை சச்சின் 16 வயதில் 1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார்.