வீடியோ… இது எல்லாம் ரொம்ப தப்பு… விண்டீஸ் வீரருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் !!

இங்கிலாந்து விண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸும், விண்டீஸ் வீரர் பிளாக்வுட்டும் கடும் வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி துவங்கியது.

கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்துவிட்டு டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 153 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 120 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய விண்டீஸ் அணி 411 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கார்லஸ் பிராத்வொய்ட் 160 ரன்களும், பிளாக்வுட் 102 ரன்களும் எடுத்தனர்.

பென் ஸ்டோக்ஸ் – பிளாக்வுட் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ;

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்த பிளாக்வுட், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அனைத்து யூகங்களையும் துவம்சம் செய்து அசால்டாக ரன் குவித்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பிளாக்வுட்டை வார்த்தைகளால் வம்புக்கு இழுத்தார். இதனால் கடுப்பான பிளாக்வுட்டும் பதிலுக்கு எதோ கத்தினார், ஒரு ஓவர் முழுவதும் இருவரும் மாறி மாறி கத்தி கொண்டே இருந்தனர், அம்பயர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தனர்.

96 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மொத்தம் 140 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. முதல் போட்டியை போன்றே இந்த போட்டியில் டிராவிலேயே முடிய அதிக வாய்ப்புகள் உள்ளன.

Mohamed:

This website uses cookies.