வீடியோ : ஹென்றி நிக்கோலசின் ஸ்டெம்புகளை தெறிக்கவிட்ட புவனேஷ்வர் குமார்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருப்பதால், இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. அதேசமயம், இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், தொடரை வெல்லும் முனைப்போடு இன்று களமிறங்கியது.

இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசி., கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, குல்தீப் யாதவ்விற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

4 விக்கெட் விழுந்ததும்  நியூசிலாந்து அணி சற்று நிதானமாக ஆடத்துவங்கியது. 58 ரன்னில் 4 விக்கெட் இழந்த நியூசிலாந்து அணி 118 ரன் வரை சற்று தேக்கி ஆடியது. அடுத்து வந்த காலின் டி க்ரான்ட்ஹோம் அதிரடியாக அடி ரன்னை சேர்க்கத்துவங்கினார்.

பின்னர், மைதானத்திற்கு வெளியே சென்று ஆட்டத்தை கவனித்து விட்டு பின்னர் உள்ளே வந்தார். அதன் பின் புவனேஷ்வர் குமாரை பணித்தார் கோலி. 38ஆவது ஓவரின் 5ஆவது பந்தை வீசிய புவ்னேஷ்வர் குமாரின் அற்புதமான அந்த ரிவர்ஸ் ஸ்விங்கை கண்டறியாத இடது கை பேட்ஸ்மேன் ஹென்றி நிக்கோலஸ் பேடிற்குள் பந்தை விட்டு தனது ஸ்டெம்பை புவனேஷ்வரிடம் பறிகொடுத்தார்.

இந்த போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்திய் அணி கடுமையாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Editor:

This website uses cookies.