வீடியோ : ஸ்டம்பிற்கு பின்னாள் நின்று பேட்டிங் செய்யும் இலங்கை வீரர் சமர சில்வா

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் எம்.ஏ.எஸ். யுனிசலா மற்றும் டீஜே லங்கா ஆகிய இரு அணிகள் மோதின. அப்போது பேட்டிங் செய்த  சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை அடிக்க முயன்றார்.

வேகமாக வந்த பந்தை ஸ்டம்பிற்கு வெளியே சென்று அடிக்க வெண்டும். அதே போல் சில்வாவும் பந்தை அடிப்பதற்காக வெளியே சென்றார். பந்து வீசப்பட்டது. வேகமாக வந்த பந்தை சில்வா முன்னால் சென்று எதிர்க்கொள்ள வேண்டும். ஆனால் அவர் ஸ்டெம்பிற்கு பின்னாலேயே நின்றார். பந்து வீச்சாளர் பந்தை சரியாக ஸ்டெம்பின் மீது எறிந்தார்.

சில்வா அவுட் ஆனார். வித்தியாசமான முறையில் விளையாட முயன்ற சில்வா அவுட் ஆனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பந்தை எதிர்கொள்ள முடியாததால் சில்வா ஓய்வறையை நோக்கி சென்றார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பலர் சில்வாவின் விளையாட்டை விமர்சித்து வருகின்றனர். அவரின் முயற்சி அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தியது.

ஸ்டெம்பிற்கு முன் நின்று ஆடாமல், பவுலர் பந்து வீச அருகில் வந்தபோது ஸ்டெம்பிற்கு பின்புறம் சென்று பந்தை அடிக்க முயன்றார்.ஆனால் பந்துவீச்சாளர் சரியாக பந்தை ஸ்டெம்பிற்கு போட்டு அவுட்டாக்கினார்.இப்படி தேவையில்லாத முறையில் விளையாட முயன்ற சமர் சில்வா இரண்டாண்டுகள் கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Editor:

This website uses cookies.