புஜாராவின் சதத்தை தன் சதம் போல கட்டிப்பிடித்து கொண்டாடினார் விராட் கோலி. அதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 404 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் புஜாரா 90 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்கள் அடித்திருந்தனர்.
8 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் குல்தீப் இருவரும் அணியின் ஸ்கோரை 300 ரன்களில் இருந்து 400 ரன்கள் ஆக உயர்த்துவதற்கு உதவினர். அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் அடித்து ஆட்டம் இழக்க இந்திய அணி வலுவான நிலையை பெற்றது.
அடுத்ததாக பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிம்ம சொப்பனமாக விளங்கினார். குல்தீப் நான்கு விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்ற, வங்கதேசம் அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, பாலோ ஆன் செய்யாமல் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. கேஎல் ராகுல் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். நிதானமாக ஆடிய சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 110 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிவந்த புஜாரா முதல் இன்னிங்ஸில் தவறவிட்ட சதத்தை இரண்டாவது இன்னிங்சில் அருமையாக நிறைவேற்றினார்.
கிட்டத்தட்ட 3.5 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் புஜாரா சதம் அடித்திருக்கிறார். அதாவது 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அடித்திருக்கிறார். புஜாரா சதம் அடித்ததை கொண்டாடுவதற்கு முன்னரே விராட் கோலி கையை தூக்கிக்கொண்டு புன்னகையுடன் புஜாராவை நோக்கி கட்டிப்பிடிக்க ஓடினார். இந்த நிகழ்வின் வீடியோ இணையதளங்களில் வெளியாகிய பலரின் மனதையும் கவர்ந்திருக்கிறது.
வீடியோ: