வீடியோ: ஏர்போட்டில் மாறிமாறி கட்டிபிடிக்கும் சென்னை வீரர்கள்.. கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் நடக்கும் அதிகாரிகள்.. வைரலாகும் வீடியோ!

வீடியோ: ஏர்போட்டில் மாறிமாறி கட்டிபிடிக்கும் சென்னை வீரர்கள்.. கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் நடக்கும் அதிகாரிகள்.. வைரலாகும் வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான பிறகு, வீரர்கள் விமான நிலையத்தில் பணி மேலாளரை கட்டிப்பிடித்தபடி நடந்து செல்லும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து நிலவி வந்ததால் 5 மாத காலமாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. மார்ச் மாத இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரும் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரை ஒத்தி வைத்தால் இந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தது. இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு அனுமதி பெற்று கால அட்டவணையை வெளியிட்டது. போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதற்காக இந்தியாவிலிருந்து வீரர்கள் பலர் விமானம் மூலம் துபாய் மற்றும் அபுதாபி சென்றுவிட்டனர். அவர்களுக்கு ஹோட்டலில் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி நடந்தது. அதன் பிறகு நடந்த பரிசோதனையில் சென்னை அணியின் இரண்டு வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு முதல் கட்டமாகவும், அடுத்ததாக ஆறு பேருக்கு என மொத்தம் பதிமூன்று பேருக்கு தற்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை வீரர்கள் துபாய் வந்தடைந்தபோது விமான நிலையத்தில் அணியின் மேலாளர் ரஸ்ஸல் ராதாகிருஷ்ணன் உடன் கட்டிப்பிடித்தபடி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பதிவிட்ட ஒருவர், இதுதான் பிசிசிஐ அறிவுறுத்திய விதிமுறையா? இதில் எந்த விதத்தில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு இருக்கிறது. இப்படியான விதிமுறையை முறையாக பின்பற்றவில்லை என்றால், கொரோனா பரவாமல் எப்படி இருக்கும்? அதற்கான நடைமுறை எப்போது எடுக்கப்படும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வீடியோ:

 

Prabhu Soundar:

This website uses cookies.