இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளும் டப்ளினிலேயே நடைபெற்றது. முதல் டி20 போட்டி டப்ளினில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா, 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்து காட்டியது.
இதையடுத்து இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலைமையில் இருந்தது அயர்லாந்து. இந்திய அணியோ, தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது.
இரண்டாவது டி20 போட்டிக்கான டாஸ் வென்ற அயர்லாந்து அணி, இந்தியாவை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரரில் ஒருவரான லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், கேப்டன் விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ராகுல், 36 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, 45 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். கடைசியாக ஹர்திக் பாண்டியா, வெறும் 9 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
இமாலய ரன் இலக்கை கடக்க வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், அந்த அணியின் ஒரு வீரர் கூட 20 ரன்களை எட்டாததால், 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வெறும் 70 ரன்களுக்கு இழந்தது. இதனால் இந்திய அணி 143 ரன்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா சார்பில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த போட்டியின் போது உமேஷ் யாதவ் பந்தில் பொலட் ஆனவுடன் கெட்ட வார்த்தையில் திட்டும் பொர்ட்டர் பீல்ட் வீடியோ கீழே :