வீடியோ : தோற்றதால் ஸ்டம்புகளை உதைத்தெறியும் பிரக்யான் ஓஜா, வைரல் ஆகும் வீடியோ
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என வரணிக்கப்பட்டாலும் பல கட்டங்களில் ஆடும் வீர்ரகள் ஜெண்டில்மேனாக இருப்பதில்லை. நாம் இதற்கான சான்றுகளாக பலவற்றை பார்த்திருப்போம்.
டென்னிஸ் லில்லி ஜாவித் மியாந்தத்தை காலால் உதைப்பதில் இருந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கிரிக்கெட் லீக்கில் மைதானத்திலேயே இரு அணி வீரர்களும் பேட் மற்றும் ஸ்டம்புகளை எடுத்து தாக்கி கொண்டதை பார்த்திருப்போம்.
சென்ற ஐ.பி.எல் தொடரில் கூடா ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மும்பை அணியின் கெய்ரோன் பொல்லார்ட் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட பந்து மற்றும் பேட்டால் தாக்கி கொண்டனர்.
அதே போல் தான் ஆஸ்திரேலியாவிள் நடக்கும் பிக் பாஷ் லீக்கில் மர்லோன் சாமியுல்ஸ் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் அணிந்திருக்கும் உடைகளை இழுத்துக்கொண்டு சண்டை போட்டனர்.
இப்படியாக ஜெண்டில்மேன் கேம் என்று சொல்லிக்கொண்டாலும் கேம் மட்டுமே ஜென்டில்மேனாக இருக்கிறது வீரர்கள் அப்படி இருந்த பாடில்லை. அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஒரு அருவருக்கத்தக்க செயலை செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் நன்றாக தெரிகிறது. அது தான் ஆட்டத்தின் கடைசி பந்து போலும் அந்த பந்தினை டாஸ் பாலாக வீசுகிறார் ஓஜா. அதனை தூக்கி வேகியே அடித்துவிட்டு வெற்றி பெறுகிறார் பேட்ஸ்மேன். ஆத்திரம் பொறுக்காத ஓஜா, டென்ஷன் ஆகி மூன்று ஸ்டம்புகளை அப்படியே உதைத்துவிட்டு போகிறார்.
பின்னால் இருந்த கீப்பர் அகில நொடிகள் உறைந்து போய் அப்படியே கீழே படுத்துக்கொள்கிறார். கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜமான ஒன்றாகும், அப்படி தோல்வி அடையக்கூடாது என்றால் அன்றைய நாளை நமக்கானதாக மாற்ற கடுமையாக போராட வேண்டும். அப்படியும் தோற்று விட்டால் கூட அதனை ஒரு ஆட்டமாக எடுத்துக்கொண்டு சகஜமாக செல்லுதல் இயல்பு. ஆனால் ஓஜாவால் கட்டப்படுத்தமுடியால் இப்படி விரகத்தியை மைதானத்திலேயே காட்டுதல் என்பது தேவையில்லாத ஒன்று. நல்லவேலையாக இவர் செயத இந்த வேலை யாரையும் காயப்படுத்தவில்லை.