வீடியோ; தல தோனி ஸ்டைலை காப்பி அடிக்கும் கிளன் மேக்ஸ்வெல்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முயற்சி எடுத்து வருகிறார்.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் எம்எஸ் டோனி இணைந்துள்ளார். டோனி குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி இந்தியாவின் லெஜண்ட், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை காப்பியடிக்க முயற்சி செய்கிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘ஒரு ஆட்டத்தில் டோனி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன். பால்க்னெர் வீசிய அடுத்த பந்தில் சிக்ஸ் விளாசினார்’’ என்று மேக்ஸ்வெல் நினைவூட்டினார்.
கிளன் மேக்ஸ்வெல்லின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எண்ட்ரீ கொடுக்கும் தல தோனி;
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, டி-20 அணியில் இடம்பெறாமல் இருந்த முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனி, ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். குழந்தையைப் பார்ப்பதற்காக இந்திய திரும்பிய ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் மீண்டும் அணியில் சேரவுள்ளனர். அத்துடன், ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவும் அணிக்கு திரும்புகிறார்.