வீடியோ: இந்த உலக்கோப்பையின் மிகச்சிறந்த கேட்சை பிடித்த நியூஸி வீரர் மார்டின் கப்டில்!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 37-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
7 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டது. வெற்றிப்பயணத்தை நீட்டித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்கும் உத்வேகத்துடன் ஆடுவார்கள்.
நியூசிலாந்து அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை, ஒரு தோல்வி என்று 11 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நியூசிலாந்து அணி, முந்தைய லீக்கில் பாகிஸ்தானிடம் தோற்றது.
LONDON, ENGLAND – JUNE 29: Trent Boult of New Zealand(L) reacts as David Warner of Australia(R) survives a chance during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between New Zealand and Australia at Lords 
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரைஇறுதியை உறுதி செய்து விடும். ஆனால் அந்த பணி எளிதல்ல என்பதை அறிவார்கள். இரு அணிகளும் ஏறக்குறையை ஒரே மாதிரியான பலத்துடன் காணப்படுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
நியுஸிலாந்து அணி: மார்ட்டின் குப்டில் , ஹென்றி நிக்கோல்ஸ் , கேன் வில்லியம்சன்  , ரோஸ் டெய்லர் , டாம் லாதம்  , ஜேம்ஸ் நீஷாம் , கொலின் டி கிராண்ட்ஹோம் , மிட்செல் சாண்ட்னர் , இஷ் சோதி , லாக்கி பெர்குசன் , ட்ரெண்ட் போல்ட்
ஆரோன் பிஞ்ச் : டேவிட் வார்னர் , உஸ்மான் கவாஜா , ஸ்டீவன் ஸ்மித் , க்ளென் மேக்ஸ்வெல் , மார்கஸ் ஸ்டோனிஸ் , அலெக்ஸ் கேரி , பாட் கம்மின்ஸ் , மிட்செல் ஸ்டார்க் , நாதன் லியோன் , ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்

 

 

 

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா திணறிவருகிறது 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீசம் 2 விக்கெட்டுகளும் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்

Sathish Kumar:

This website uses cookies.