வீடியோ: வாடா ஒத்தைக்கு ஒத்தை பாத்துக்கலாம்.. சீண்டிய ஸ்டாய்னிஸ்… தனது பாணியில் பதிலடி கொடுத்த விராட் கோலி!

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலியை கோபப்படுத்தும் விதமாக, மார்கஸ் ஸ்டாய்னிஸ் நேருக்கு நேரே வந்து  விராட் கோலியின் தோள்பட்டையில் மோதியுள்ளார். அதற்கு பலமாக முறைத்திருக்கிறார் விராட் கோலி. இந்த வீடியோவை கீழே பார்ப்போம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் தொடரை யார் வெல்வர் என்று நிர்ணயிக்கக்கூடிய டிசைடர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த இலக்கை சேஸ் செய்துவரும் இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இதில் ரோகித் சர்மா 17 பந்துகளில் 30 ரன்களுக்கு அவுட்டானார். சுப்மன் கில் 49 பந்துகளில் 37 ரன்கள் அடித்திருந்தபோது, துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

இந்திய அணி 77 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் பேட்டிங் செய்துகொண்டிருக்கையில், இவர்களது விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வந்த ஆஸ்திரேலியா அணி பவுலர்கள் பேட்ஸ்மேன்களை வம்பிழுக்க துவங்கினர்.

குறிப்பாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஓவரில் இவர்கள் இருவரும் பவுண்டரிகளை அடிந்து வந்ததால் விரக்தியடைந்த அவர், நேராக நடந்து வந்து விராட் கோலியின் தோள்பட்டையில் மோதினார். அதை கண்டுகொள்ளாமல் நடந்து சென்றார். சற்று கோபமடைந்த விராட் கோலி, முறைத்தபடி நகர்ந்தார். இதை மைதானத்தில் கண்டுகொண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதுவரை போட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. இந்த சம்பவத்தினால் சற்று சூடு கிளம்பியது.

வீடியோ:

நன்றாக விளையாடி வந்த கே எல் ராகுல் 32 ரன்களுக்கும், விராட் கோலி 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முதல் இரண்டு போட்டிகளில் எப்படி முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தாரோ, இப்போட்டியிலும் வந்த முதல் பந்தலிலே ஆட்டம் இழந்து வெளியேறினார். 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

இந்திய அணி வெற்றி பெற இன்னும் 9 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் விளையாடி வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.