பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 என்றாலே எப்போதும் சர்ச்சைகள்தான் ஒன்று சூதாட்ட சர்ச்சை கிளம்பும் அல்லது வீரர்கள் பந்தைச் சேதம் செய்த சர்ச்சைக் கிளம்பும், எனவே இது புதிதல்ல.
ஆனால் இங்கிலாந்து தொடர்க்க வீரர் ஜேசன் ராய் தான் ஆடும் சர்பராஸ் அகமெட் தலைமை குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்காக ஆட்டத்தின் போது கடந்த வியாழக்கிழமை கேட்டது இப்போதுதான் சர்ச்சையாகியுள்ளது.
கிளேடியேட்டர்ஸ் அணி ஆடும் இன்னிங்சின் போது 17வது ஓவரை வஹாப் ரியாஸ் வீச ஜேசன் ராய், வஹாப் ரியாசிடம் ‘ரிவர்ஸ் ஸ்விங்குக்காக பந்தைச் சேதம் செய்தீர்களா?’ என்று கேட்க, அதற்கு வஹாப் ரியாஸ் கோபாவேசமாக சில வார்த்தைகளைக் கூற இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கேப்டன் சர்பராஸ் அகமெட் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணி தங்கள் போட்டி அறிக்கையில் பந்தின் தன்மை மாற்றப்பட்டது என்று புகார் எழுப்பப்பட்டுள்ளது, ஆனால் பவுலர் பெயரைக் குறிப்பிடவில்லை, அது முன்னாள் பாக் பவுலர் வஹாப் ரியாஸ்தான்.
ஆனால் சர்பராஸ் இந்த சம்பவத்தை அடக்கி வாசிக்குமாறும் வீரர்கள் போட்டி மனப்பான்மையுடன் ஆடும்போது இத்தகைய விஷயங்கள் நடப்பது இயல்பே என்றும் கூறியதாக பாகிஸ்தான் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.