இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்றுமுன்தினம் (5-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான மார்கிராம், டீன் எல்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். தென்ஆப்பிரிக்கா 52 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கிராம் 34 ரன்கள் நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட்வாட்ச்மேன் ஆக ரபாடா களம் இறங்கினார். டீன் எல்கர் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
இன்று மீண்டு வந்த ஆடிய இந்திய அணி துவக்க முதலே அசத்தலாக ஆடியது. முகமது சமி தந்து பழைய பார்மை பிடித்துள்ளார். அவரது வேகம் மற்றும் பவுன்சரால் ஒரு பக்கம் மிரட்ட மறு பக்கம் ஜஸ்ப்பிரிட் பும்ரா தனது வேலையை காட்டினார்.
82 ரன்னிற்கு 4 விக்கெட் என ஆடி வந்த தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது போல் ஒரு பந்தினை வீசினார் பும்ரா. தென்னாப்பிரிக்க அணி கேப்டன் வெறும் 4 பந்துகள் மட்டுமே பிடித்திருந்தார். பும்ரா வீசிய அப்படியான ஒரு அதிர்ச்சியான பந்தினை அறிந்திராக டு பிலேசிஸ் திணறி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியியேறினார்.
அந்த வீடியோ கீழே :