வீடியோ: கொஞ்சம் கைய வச்சுட்டு சும்மா இரேண்டா!! பிரதமர் முன் சேட்டை செய்த ஜோப்ரா ஆர்ச்சர்! கையை பிடித்து வைத்த ஜேசன் ராய்!

உலக கோப்பையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உலகக் கோப்பை தொடரில் பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. ’டை’ ஆன இந்தப் போட்டியில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், புதுமையாக, அதிக பவுண்டரி கள் அடித்த அணி என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உலகக் கோப்பையை, முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

 

இதைக் கொண்டாடி வரும் அந்த அணி வீரர்கள், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிரதமர் தெரசா மேயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். போட்டியில் வென்ற உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு தெரசா மேவுடன் அப்போது அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் மரியாதை நிமித்தமாக உலக கோப்பை வென்ற உடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்திக்க இங்கிலாந்து வீரர்கள் சென்றனர். இங்கிலாந்து பிரதமரிடம் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கோப்பையை காட்டி விவரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் நின்றிருந்த ஜேசன் ராயை, சோப்ரா ஆச்சர் பின்னாலிருந்து கைவைத்து சேட்டை  செய்து கொண்டிருந்தார். உடனே சுதாரித்த ஜேசன் ராய் சிரித்துக்கொண்டே, கொஞ்சம் கைய வச்சுட்டு சும்மா இருடா, பிரதமர் இருக்கிறார் என்பது போல் அவரது கையை பிடித்து அடக்கினார். இந்த நகைப்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் தெரசா மே இந்த மாத இறுதியில் விடை பெறும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களான போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரேமி ஹன்ட் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  அவர்கள் இருவரும் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டனர்.  இதில், பென் ஸ்டோக்சுக்கு வீரத்திருமகன் அந்தஸ்து வழங்கப்படுமா? என கேட்டதற்கு இருவரும் ஆம் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
https://twitter.com/JofraArcher/status/1151066130439639040
கிரிக்கெட் விளையாட்டில் சிறப்புடன் பங்காற்றியதற்காக இதுவரை 11 இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வீரத்திருமகன் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.  சமீபத்தில், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்புடன் செயலாற்றியதற்காக சர் அலெஸ்டைர் குக் இந்த கவுரவம் பெற்றார்.  இந்த அந்தஸ்து பெறுபவர் தனது பெயருக்கு முன்னால் திரு. என்பதற்கு பதிலாக சர் என போட்டு கொள்ளலாம்.
கடந்த இரு வருடங்களுக்கு முன் பிரிஸ்டல் நகரில் நடந்த மோதல் சம்பவத்தில் ஸ்டோக்ஸ் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு கூறப்பட்டது.  இதில் ஒருவர் காயமுற்றார்.  இதனால் கடந்த 2017-18ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரில் அவர் பங்கேற்க முடியவில்லை.  ஆனால் இந்த சம்பவத்தில் ஸ்டோக்சுக்கு தொடர்பில்லை என பின்னர் தெரிய வந்தது.  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான அடுத்த ஆஷஸ் தொடர் வருகிற ஆகஸ்டு 1ந்தேதி நடைபெற உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.