வீடியோ: ஒரே ஓவரில் 28 ரன், பொல்லார்டு கும்மாங்குத்து

கரீபியன் ப்ரீமியர் லீக் :

மேற்க்கு இந்திய தீவுகளில் தற்போது சிபிஎல் எனப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் நடந்து  வருகிறது. இத்தொடரில் மொத்தம் ஆறு அணிகள் விளியயாடி வருகிறது. இதில் பார்படாஸ் ட்ரேன்ட்ஸ் அணியுன் கேப்டன் தான் கெய்ரோன் பொல்லார்ட். அவர் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான ஒரு வீரர் ஆவார்.

மும்பை இந்தியன்ஸில் ஆடுவது போலவே கரீபியன் ப்ரீமியர் லீக்கிலும் தனது ருத்ர தாண்டவத்தை காட்டி வருகிறார். நேற்று முந்தினம் பார்டபடாஸ் ட்ரேன்ட்ஸ் அணிக்கும் ஜமைக்கா டல்லவாஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடந்தது.

இப்போட்டியில் தனது வழக்கமான ருத்ரதாண்டவத்தை ஆடினார். ஒரு காட்டு காட்டிய பொல்லார்டு கடந்த  33 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அதில் 5 ஃபோர்களும் 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். கடைசியாக கொடுககப்பட்ட 20 ஓவர்கள் 196 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்தது.

இவரது இந்த ஆட்டத்தில் 20வது ஓவரில் மட்டும் 28 ரன்களை போட்டு தாக்கினார் பொல்லார்டு. அந்த ஓவரை வீசியவர் அவரது மேற்கிந்திய தீவுகள் அணியின் சக வீரர் ஜெரோம் டெய்லர் . அந்த ஒவரை இரக்கம் காட்டாமல் விளாசினார் பொல்லார்டு. அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை ஃபோர் அடித்த அவர், மூறாவது யார்க்கர் பந்தை விரட்டி லாங் ஆஃபில் அடித்தர் போல்லார்டு. இதில் எப்படியாவது இரண்டு ரன் ஓடி மீண்டும் பேட் பிடிக்க நினைத்தார். அதனால் மிரண்டு போன லாங் ஆஃப் ஃபீல்டர் பந்தை எடுத்து வேகமாக எறிய அந்த பிடிக்கப்டாமல் போன அந்த பந்து ஃபோர் ஆனது. ஏற்கனேவே இரண்டு ரன் ஓடிய நிலையில்  இந்த ஃபோர் உடன் சேர்த்து மூன்றாவது பந்தில் 6 ரன் ஆனது.

நான்காவது பந்தை சிகசருக்கு தூக்கி வீசிய பொல்லார்டுக்கு அடுத்த பந்தில் அடித்தது லக். மூன்றாவது பந்தை போலவே 5வது பந்திலும் 2 ரன் ஓவர் த்ரோ மூலம் கிடைக்க .அடுத்த 6வது பந்தை மீண்டும் சிக்சருக்கு அடித்த பொல்லார்டு அந்த ஓவரில் 28 ரன்களை விளாசினார்.

4, 4, 4+2, 6, 2, 6

 

இறுதியாக பார்படாஸ் அணி 197 ரங்களை குவித்தது. பின்னர் மழையால் தடைபட்ட ஆட்டம் பார்படாஸ் அணி டிஎல்எஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

 

Editor:

This website uses cookies.