வீடியோ : அச்சு அசலாக தவானை போலவே பேட்டிங் செய்து தவானை கிண்டல் செய்யும் விராட் கோலி!!

அணியில் யாரை சேர்ப்பது, யாரை விடுவது என்கிற தலைவலி எனக்கு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதற்கிடையே அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியது. டப்ளினில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 70 ரன்களும் சுரேஷ் ரெய்னா 45 பந்தில் 69 ரன்களும் எடுத்தனர்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ’இந்த வெற்றியின் மூலம் தேவையான நேரத்தில் சரியான உத்வேகத்தை பெற்றி ருக்கிறோம். சமநிலையிலான திறமையை வீரர்கள் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. எனக்கு இப்போதுதான் தலைவலி ஆரம்பித்திரு க்கிறது. யாரை ஆடும் லெவனில் சேர்ப்பது, யாரை விடுவது என்பதற்கான தலைவலி இது. இது ஆரோக்கியமான அறிகுறிதான். இந்திய கிரிக்கெட் டுக்கு இது சரியான காலகட்டம். எங்களுக்கு எதிரணி பற்றி எப்போதும் கவலை இல்லை. அவர்கள் கடுமையாக வந்தால், எங்களிடமும் சிறந் த பேட்டிங் பலம் இருக்கிறது. அதோடு மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி கடுமையானதாகவே இருக்கும்.

எங்கள் அணி வீரர்களிடையே ரிலாக்ஸான சூழலை உருவாக்குவது கடினமானது அல்ல. சிஸ்டம் என்ன என்பது வீரர்களுக்குத் தெரியும். அளவு கோல் என்ன என்பது அமைக்கப்பட்டு விட்டது. வீரர்களுக்கும் அவர்கள் பொறுப்பு என்ன என்பது தெரியும். அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். கேப்டனாக நான், எதையும் சொல்ல வேண்டியதில்லை’ என்றார்.

இந்த ஆட்டட்திற்கு முந்தைய பயிற்சி செசைன்ல் தவானை போலவே ஷாட்களை ஆடி அவரை கிண்டல் செய்துள்ளார் விராட் கோலி. அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Editor:

This website uses cookies.