வீடியோ: இல்லாத ஒன்னுக்கு அவுட் கொடுத்த அம்பயர்.. திரும்பி திரும்பி முறைத்த அகர்வால்!
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கிராண்ட் ஹோம் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பிரித்வி ஷா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா நீண்ட நேரம் விளையாடினார். ஆனால் அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை. அவர் 81 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அப்போது சவுத்தி வீசிய பந்து அகர்வால் பேட்டில் படாதவாறு இருந்தது. ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. டிஆர்எஸ் முறைப்படி பார்க்கையில் அதிலும் பெரிதளவில் பேட் ஈடுபாடு இல்லை. ஆனாலும் அவுட் கொடுக்கப்பட்டது.
இதனால், அம்பயரை முறைத்தபடியே 58 ரன்னில் அகர்வால் வெளியேறினார்.
வீடியோ: