ரோகித் சர்மாவின் கேச்சை எடுக்க முயற்சித்தபோது, ஆர்சிபி வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் சிராஜ் இருவரும் மைதானத்திற்குள் ஒருவரை மற்றொருவர் முட்டி மோதிக்கொண்டு கேட்சை கோட்டைவிட்டனர். இதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் இருவரும் ஓபனிங் செய்தனர். பந்துவீச்சு மூலம் துவக்க வீரர்களை அச்சுறுத்தி வந்த சிராஜ், முதலில் இஷான் கிசன்(10) விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன்பிறகு ரோகித் சர்மாவுக்கு சிறப்பான பவுன்சர் ஒன்றை வீசினார் சிராஜ். அதை ரோகித் சர்மா தூக்கி அடித்தபோது குடைகிளப்பியது. இதனை பிடிக்க கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் பவுலர் சிராஜ் இருவரும் ஓடி வந்தனர். இருவருக்கும் இடையே எந்தவித புரிதலும் இல்லாததால் ஒருவரை மற்றொருவர் மோதிக்கொண்டு கேட்ச்சை கோட்டைவிட்டனர்.
இந்த சம்பவத்தினால் இருவருக்கும் முகத்தில் பலமாக அடிபட்டது. பிசியோ உள்ளே வலிக்கு மருந்தை தடவியபிறகே, சிராஜ் மீண்டும் பந்துவீசச் சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி, பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
வழக்கமாக, பாகிஸ்தான் வீரர்கள் ஃபீல்டிங்கில் கேட்சை பிடிக்காமல், அடிக்கடி ஒருவர் மீது மற்றொருவர் பலமாக மோதிக்கொள்வர். இதற்கு பாகிஸ்தான் வீரர்கள் பிரபலம் என்பதால், அவர்களுடன் ஆர்சிபி வீரர்கள் சிராஜ் – தினேஷ் கார்த்திக் இருவரும் ஒப்பிடப்பட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கேட்ச் தவறவிட்ட இந்த வாய்ப்பை ரோகித் சர்மா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். 10 பந்துகள் பிடித்து வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார்.
கேமரூன் கிரீன் 5 ரன்கள், சூரியகுமார் யாதவ் 15 ரன்கள் அடித்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. திலக் வர்மா உள்ளே வந்து தனது அதிரடியை வெளிப்படுத்தி, தனி ஆளாக போராடி வருகிறார்.
திலக் வர்மாவுடன் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த நேகல் வதேரா, 21 ரன்களுக்கு அவுட் ஆனார். டிம் டேவிட் 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். தற்போது களத்தில் திலக் வர்மா மற்றும் ஹ்ரித்திக் இருவரும் விளையாடி வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக் மற்றும் சிராஜ் இருவரும் மோதிக்கொண்டு கேச்சை தவறவிட்ட வீடியோ: