பல மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு காட்சியளித்த தோனி வெளியான வீடியோ
மகேந்திர சிங் தோனி ரசிகர்களுக்கு ஆடுகளத்தில் காட்சி அளித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. சென்ற வருடம் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரின் செமி பைனல் போட்டியில் இருந்து வெளியேறிய அவர் தற்போது வரை திரும்பவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. கொரோனா வைரஸ் அனைத்தையும் பாழாக்கிவிட்டது. 2019 இல் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனது வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். அதுவும் தனது பண்ணை வீட்டில் ஜாலியாக தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். 39 வயதான இவர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தை உபயோகித்து இருந்தார் .அதன் பின்னர் அவ்வப்போது அவரது மனைவி சாக்ஷி அவரது செய்திகளைப் பற்றி வீடியோ அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனது பண்ணை வீட்டில் இருந்தபடியே திடீரென தனது ரசிகர் ஒருவருடன் வீடியோவில் உரையாடி அதனை வெளியிட்டுள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலியாகியுள்ளனர்.