புனே மைதான ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்த தல தோனி !!

புனே மைதான ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்த தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டும் விளையாட களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் போட்டி நடைபெறும் போது காவிரி பிரச்சினை காரணமாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மற்ற 6 போட்டிகள் புனேவிற்கு மாறியது.

திடீரென மாறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளுமா? என்ற சந்தேகம் எழும்பியது. ஆனால் மைதான பராமரிப்பாளர்கள் கடுமையாக உழைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ல் ஐந்தில் வெற்றி வாகை சூடியது.

இரவு பகலாக உழைத்த மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்க டோனி முடிவு செய்தார். அதன்படி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டம் முடிவடைந்தவுடன், மைதான பராமரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 20 ஆயிரத்துக்கான தொகையும், தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபிரேம் செய்தும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து டோனி கூறுகையில், “இது மைதான பராமரிப்பளர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்பட்டது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பணம் மற்றும் புகைப்படம் வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

ப்ளே ஆஃப் அட்டவணை;

குவாலிபயர் 1 ; சன் ரைசர்ஸ் ஹைதரபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்; வான்கடே மைதானம், மும்பை

நாள்; மே 22 (செவ்வாய்கிழமை)

எலிமினேட்டர்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்; ஈடன் கார்டன், கொல்கத்தா

நாள்; மே 23 (புதன் கிழமை)

குவாலிபயர் 2; குவலிபயர் முதல் போட்டியில் தோல்வியடையும் அணி vs எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி

இடம்; ஈடன் கார்டன், கொல்கத்தா

நாள்; மே 25 (வெள்ளிகிழமை)

இறுதி போட்டி; மே 27

இடம்; வான்கடே மைதானம், மும்பை

Mohamed:

This website uses cookies.