ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் ஷிவா டோனி – வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டோனியின் மகள் ஷிவா உற்சாகப்படுத்தும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவை உற்றாகப்படுத்தும் ஷிவா டோனி – வைரலாகும் வீடியோ
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அயர்லாந்திர்கு எதிரான டி20 போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதற்கிடையே அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியது. டப்ளினில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 70 ரன்களும் சுரேஷ் ரெய்னா 45 பந்தில் 69 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியை உற்சாகப்படுத்தும் விதமாக டோனியின் மகள் ஷிவா பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஷிவா, கம் ஆன் ஹர்திக் கம் ஆன் என கத்துகிறார். இந்த வீடியோவை டோனி மனைவி சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, எனக்கான சியர்லீடர் ( உற்சாகப்படுத்துபவர்) கிடைத்து விட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார். டோனியின் மகள் ஷிவாவின் வீடியோ அடிக்கடி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெறும். ஷிவாக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் நடமாடுவது, பாடுவது போன்ற வீடியோக்கள் வலைத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Editor:

This website uses cookies.