வீடியோ; மைதானத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய கிரிக்கெட் வீரர்
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிசுற்று போட்டியில் நைஜீரிய வீரர் திடிரென மாயமாகி மீண்டும் களத்திற்கு திரும்பிய சுவாராஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற தகுதிசுற்று போட்டியில் நைஜீரியா – கனடா அணிகள் மோதின.
இந்த போட்டியில் நைஜீரியா அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது. நைஜீரிய வீரர் ரன்ஸ்ஈவ் 18 ரன்கள் எடுத்திருந்த போது திடிரென ஆடுகளத்தில் இருந்து டிரெஸ்சிங் ரூமிற்கு ஓடி உள்ளார். வெகுநேரமாகியும் பேட்ஸ்மேன் திரும்பி வராததால் அவரது சகஅணி வீரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த குழப்பத்தினால் அடுத்த வீரரை நைஜீரியா அணி களம் இறக்கியது. இதன்பின் டிரெஸ்சிங் ரூமிலிருந்து ரன்ஸ்ஈவ் தனது பேடை மீண்டும் சரிசெய்து கொண்டு வெளியே வந்தார். அதனால் நடுவர் அவரை மீண்டும் களத்திற்கு வர சொன்னார்.
ரன்ஸ்ஈவ் அவசரமாக பாத்ரூம் சென்று வந்தார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த நைஜீரிய வீரர்கள் சிரிப்பில் ஆழ்ந்தனர். போட்டிக்கு நடுவே ரன்ஸ்ஈவின் இந்த செயலால் சிறிது நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.
நைஜீரியாவிற்கு எதிரான இந்த போட்டியில் கனடா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 7 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நைஜீரிய அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.