இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தற்போது உடல்தகுதி பெறவும், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறவும் கடினமாக பயிர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வரும் ஆசிய கோப்பையில் இடம்பெற இந்த பயிர்ச்யில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
யுவராஜ் சிங் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணியில் இடம்பெற்றார். அதன் பின் முக்கிய உடல்தகுதி பயிர்ச்சியான யோயோ பரிசோதனையில் தேர்ச்சிபெற தவறியதால் அணியில் இடம்பெற முடியவில்லை.
கடந்தமுறை சன் ரைசெஸ் அணிக்காக ஆடிய யுவராஜ் இந்த முறை சரியாக ஏலம் போகவில்லை. இறுதியாக உள்ளுர் அணியான பஞ்சாப் அணிக்கு 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதை பயன்படுத்தி சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் இவரது ஆட்டம் சொதப்பல் தான்.
2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றினார்.
2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகனாக ஜொலித்தார். அதேநேரம் 2011ம் ஆண்டு உலககோப்பையின் போது இவருக்கு கேன்சர் வந்ததால் உடல்தகுதியில் கவனம் செலுத்த முடியவில்லை.
அதன்பிறகு வந்த காலம் அனைத்தும் இவருக்கு சோதனை தான்.
இதுவரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள யுவராஜ் 8701 ரன்கள் அடித்துளார். 58 டி20 போட்டிகளில் 1177 ரன்கள் அடித்துள்ளார். இதில் 111 மற்றும் 28 விக்கெட்டுகள் முறையே எடுத்துள்ளார்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 89 வருடங்களில் வெறும் 40 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார்.
தற்போது மீண்டும் அணியில் இடம்பெற கடினமான பயிர்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆசிய கோப்பையை குறிவைத்து தயாராகி வருகிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சோதனை கற்றல் மற்றும் பயிற்சி மிகவும் சுவாரஸ்யமான முதல் வாரமாக இருந்தது! மிகவும் அனைத்திற்கும் மேலாக, பார்வை உயர்த்துவதற்கு நேரம் செல்ல வேண்டும் , “