நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் விக்கெட் ஸ்கெட்ச் போட்டு எடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
75 ஆண்டு காலமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அரசியல் ரீதியாக நிலவிவரும் நட்புறவை சிறப்பிக்கும் விதமாக போட்டி துவங்கும் முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் இரு நாட்டின் பிரதமர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அணியின் கேப்டன்களுக்கு சிறப்பு தொப்பியை வழங்கி கௌரவப்படுத்தினர்.
அதன் பிறகு போடப்பட்ட டாஸில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்த டிராவிஸ் ஹெட் மற்றும் மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சதமடித்து நல்ல பார்மில் இருக்கும் உஸ்மான் கவாஜா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்த ஜோடி இன்றைய போட்டியிலும் சிறப்பான துவக்கம் கொடுத்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை அனாயசமாக எதிர்கொண்டு பவுண்டரிகளாக அடித்தனர். இது இந்திய அணிக்கு சிக்கலை கொடுத்து வந்தது. அப்போது சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளே எடுத்து வந்தார் கேப்டன் ரோகித் சர்மா.
முதல் சில ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் விக்கெட்டுகள் விழவில்லை. பின்னர் திட்டமிட்டு வீரர்களை நிறுத்தி ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசினார். அப்போது அஸ்வின் பவுலிங்கை சீர்குலைக்க, அதிரடியான அணுகு முறையில் டிராவிஸ் ஹெட் இறங்கினார்.
சுதாகரித்துக் கொண்ட அஸ்வின், தந்தை லாவகமாக வீசினார். அதை தூக்கி அடிக்கும் முயற்சியில் இறங்கிய டிராவிஸ் ஹெட், அஸ்வின் போட்ட ஸ்கெட்ச்சில் வசமாக சிக்கிக்கொண்டார் ஜடேஜா நேர்த்தியாக கேட்ச் எடுத்து பார்ட்னர்ஷிப் உடைக்க உதவினார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு உள்ளே வந்த லபுச்சானே விக்கெட்டை முகமது சமி எடுத்தார். போட்டியில் தற்போது உணவு இடைவேளை வந்துவிட்டது.
உணவு இடைவேளையின்போது, ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் மற்றும் கவாஜா இருவரும் களத்தில் உள்ளனர்.
ஸ்கெட்ச் போட்டு அஸ்வின் எடுத்த விக்கெட்டின் வீடியோ: