மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இன்றைய ஒரு பயிற்சி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குப்ராஸ் (1) மற்றும் ஹசரத்துல்லாஹ் (9) ஆகியோரை ஷாகின் அப்ரிடி தனது துல்லியமான பந்துவீச்சால் வெளியேற்றி அசத்தினார். துவக்கம் சரியாக அமையவிட்டாலும், பின்வரிசையில் களமிறங்கிய ஜார்டன் (35), முகமது நபி (51*) மற்றும் உஸ்மான் கானி (32*) ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஃப்கானிஸ்தான் அணி 154 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூஃப் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதன்பின் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, 19 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாக மழை நிறகாததால் போட்டி அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது.
ஷாகின் அப்ரிடியின் மிரட்டல் யார்கரால் குர்பாஸ் விக்கெட்டை இழந்த வீடியோ;