வீடியோ: மைதானத்தில் கடுப்பான பேட்ஸ்மேன்.. என்னடா அம்பயரிங் பண்றீங்க.. இதேல்லாம் அவுட்டா? – மிகவும் சர்ச்சையை கிளப்பிய விக்கெட்!

வீடியோ: என்னடா அம்பயரிங் பண்றீங்க.. இதேல்லாம் அவுட்டா? மைதானத்தில் கடுப்பான பேட்ஸ்மேன்- மிகவும் சர்ச்சையை கிளப்பிய விக்கெட்!

கோவா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத் அணி 464 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் கோவா, குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் குஜராத் 602/8 (‘டிக்ளேர்’), கோவா 173 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத் அணி 199/6 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின், 629 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய கோவா அணிக்கு சுயாஷ் பிரபுதேசாய் (66), தர்ஷன் மிசால் (46*) ஆறுதல் தந்தனர்.

மற்றவர்கள் சொதப்ப, 2வது இன்னிங்சில் கோவா அணி 164 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. குஜராத் சார்பில் சித்தார்த் தேசாய் 5 விக்கெட் கைப்பற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜம்முவில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் கர்நாடகா 206 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் காஷ்மீர் அணி 88/2 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தில் சுபம் கஜுரியா (62) ஆறுதல் தர, முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. கர்நாடகா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஆந்திரா மற்றும் சவுராஷ்டிரா ஆட்டம்: ஆந்திராவில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 419, ஆந்திரா 136 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 375/9 ரன்கள் எடுத்து, 658 ரன்கள் வலுவான முன்னிலையில் உள்ளது.

பெங்கால் மற்றும் ஒடிசா ஆட்டம்: கட்டாக்கில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் பெங்கால் 332, ஒடிசா 250 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அபிஷேக் ராமன் (67), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (78), ஷபாஸ் அகமது (52*) கைகொடுக்க, 4ம் நாள் முடிவில் 361/7 ரன்கள் எடுத்து, 443 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

வீடியோ:

 

Prabhu Soundar:

This website uses cookies.