கம்மின்ஸ் வீசிய பந்தில் கடுமையாக தாக்கப்பட்ட கருனாரத்னே மருத்துவமனையில் அனுமதி!!

Australia's paceman Pat Cummins celebrates taking the wicket of India's captain Virat Kohli during day three of the third cricket Test match between Australia and India in Melbourne on December 28, 2018. (Photo by WILLIAM WEST / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo credit should read WILLIAM WEST/AFP/Getty Images)

கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ பேர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதத்தால் ஆஸ்திரேலியா முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Dimuth Karunarathne of Sri Lanka during day four of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 5th December 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கான்பெர்ராவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 28 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. ஹாரிஸ் 11 ரன்னிலும், கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும், லாபஸ்சேக்னே 6 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஜோ பேர்ன்ஸ் – டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அவர்கள் இலங்கை பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.

ஜோ பேர்ன்ஸ் தனது 4-வது சதத்தையும், டிராவிஸ் ஹெட் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். சதம் அடித்த இருவரும் 150 ரன்னைக் கடந்தனர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 336 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 161 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தனர்.

அடுத்து ஜோ பேர்ன்ஸ் உடன் பேட்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை நிலைத்து நின்று விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்துள்ளது.

பின்னர் கேப்டன் பெய்ன் வந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் ஆக இருந்தது.போது, டிக்ளேர் செய்யப்பட்டது. சிறப்பாக ஆடிய குர்திஸ் பேட்டர்சன் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 114 ரன்களும், ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் 45 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 பேர் சதம் அடித்துள்ளனர். இலங்கை அணி தரப்பில், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், கருணாரத்னே, ரஞ்சிதா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. திமுத் கருணாரத்னேவும் திரிமன்னேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

Sathish Kumar:

This website uses cookies.