சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும்; சுரேஷ் ரெய்னா உருக்கம் !!

சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும்; சுரேஷ் ரெய்னா உருக்கம்

சமீபத்தில் மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இளம் வயது நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் சிங் மறைந்து இரண்டு மாதமே ஆகிவிட்டாலும், அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்களும், கேள்விகளும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. வடநாட்டு ஊடகங்களும் சுஷாந்த் சிங்கின் மரணத்தை மிகப்பெரும் அளவில் ஊதி பெரிதாக்கியதால் இன்று வரை சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்தான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே போல் தனது ட்வீட்டில் இந்திய பிரதமர் மோடியையும் சுரேஷ் ரெய்னா டேக் செய்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் இன்று வரை டிரண்டிங்கில் இருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “சகோதரா! நீங்கள் என்றுமே எங்கள் மனங்களில் உயிர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் ரசிகர்கள் உங்கள் இழப்பை அதிகமாக உணர்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடைக்க நம் அரசும், தலைவர்களும் எல்லா முயற்சிகளையும் செய்வார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். நீங்கள் உண்மையான ஊக்கம் தருபவர்” என்று ரெய்னா பேசியுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்வீட்டும் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

Mohamed:

This website uses cookies.