வீடியோ; முதல் இரண்டு பந்துகளில்  இரண்டு விக்கெட்டுகளை காலி செய்த உமேஷ் யாதவ் !!

வீடியோ; முதல் இரண்டு பந்துகளில்  இரண்டு விக்கெட்டுகளை காலி செய்த உமேஷ் யாதவ்

ஐ.பி.எல் டி.20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் அசத்தியுள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யாகுமார் யாதவும், ஈவன் லீவிஸும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரை வீசிய பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே, மும்பை அணியின் துவக்க வீரர் சூர்யகுமார் யாதவை வெளியேற்றினார், அதற்கு அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் உமேஷ் யாதவ்வின் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறினார்.

போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் முதல் இரண்டு விக்கெட்டுகளை காலி செய்து உமேஷ் யாதவ் மாஸ் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

வீடியோ;

துவக்கம் சரியாக அமையாவிட்டாலும்  மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா- லிவீஸ் கூட்டணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளது.

இதன் மூலம் போட்டியின் 9வது ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை  இழந்துள்ள மும்பை அணி 88 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

Mohamed:

This website uses cookies.