வீடியோ: வந்த பந்தை ஸ்டம்புக்குள் தள்ளிவிட்ட விராட் கோலி! சல்யூட் வைத்து அனுப்பி வைத்த விண்டீஸ் வீரர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இதுபற்றி பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்ய விரும்பினோம். மிக்க மகிழ்ச்சி. இது வறண்ட மேற்பரப்புடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு முடிவு அதிக ஆச்சரியம் தருகிறது.
The Indian skipper Virat Kohli had a rare off day as he could only score four runs in the ongoing first One Day International against the West Indies at MA Chidambaran Stadium. Kohli was trying to run the ball towards the third man for a single against Sheldon Cottrell but got an inside edge which chopped back on to the stumps.
முதலில் பேட்டிங் செய்வது எங்களுடைய பலம் ஆகும். இந்த போட்டியில் மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், மயங்க் அகர்வால் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவில்லை என கூறியுள்ளார்.
இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், கேதர் ஜாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஹெட்மயர், பூரன், ராஸ்டன் சேஸ், பொல்லார்ட், ஹோல்டர், கீமோ பவுல், வால்ஷ், அல்சாரி ஜோசப், காட்ரல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
The flamboyant batsman was trying to flick the ball towards the leg-side but got a top edge. The right-hander was in sublime in the T20I series but could carry the same in the first ODI at Chennai.