வீடியோ; அடில் ரசீத்தின் அபார சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்த விராட் கோஹ்லி !!

வீடியோ; அடில் ரசீத்தின் அபார சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்த விராட் கோஹ்லி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி திணறி வருகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. தொடர் சமநிலை அடைந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய விரும்பியதால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இங்கிலாந்து பவுலர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக வீசினர். வில்லி மற்றும் மார்க் உட் ஆகிய இருவரும் ரோஹித் மற்றும் தவானை பெரிய ஷாட்களை ஆடவிடாமல் தடுத்து நெருக்கடி கொடுத்தனர். தவானாவது சமாளித்து ஆடினார். அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் தொடக்கம் முதலே திணறிய ரோஹித் சர்மா, இரண்டு ஓவர்களை முழுவதுமாக ரன்னே எடுக்காமல் வீணடித்தார். 18 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

5.4 ஓவருக்கு வெறும் 13 ரன்னுக்கு ரோஹித்தின் விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது இந்திய அணி. அதன்பிறகு தவானுடன் ஜோடி சேர்ந்தார் கோலி. இருவரும் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடியதோடு, அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தனர். ஓரளவிற்கு ரன்ரேட்டையும் உயர்த்தினர். பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில், அவ்வப்போது ரன் ஓட ஆர்வம் காட்டிய தவான், அதே ஆர்வத்தால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

49 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்த தவான், ஸ்டோக்ஸால் ரன் அவுட்டாக்கப்பட்டு வெளியேறினார்.

வீடியோ;

அடுத்தடுதாக களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்திருந்த போது அடில் ரசீத்தின் அபார சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அடுத்தடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேற தோனி மட்டும் தனியாக போராடி வருகிறார்.

Mohamed:

This website uses cookies.