நீ எப்படி இந்த கேள்விய என்கிட்ட கேக்கலாம்… டென்ஷனான விராட் கோஹ்லி
தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது போட்டியின் முடிவை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒரு பத்திரிக்கையாளரின் கேள்வியால் கடுப்பாகி கடுகடு முகத்துடன் பதில் அளித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
போட்டிக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் முதல் தோல்வியை சந்தித்த சோகத்துடன் இந்திய கேப்டன் கோஹ்லி கலந்து கொண்டார். பத்திரிக்கையாளர் மத்தியில் பேசிய கோஹ்லி “தோல்விக்கான காரணம் என்ன என்பது குறிந்து நாங்கள் நிச்சயம் ஆலோசித்து, வரும் போட்டிகளில் அதனை தவிர்த்து கொள்ள முயற்சிப்போம். நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற எங்களால் முடிந்த அளவு முயற்சித்தோம், ஆனால் போட்டியின் முடிவு எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது”.
நாங்கள் இதுவரை 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று கோஹ்லி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, திடீரென குறுக்கிட்ட பத்திரிக்கையாளர் ஒருவர் அதில் “இந்திய மண்ணில் எத்தனை போட்டிகளில் எத்தனை” என்று கிண்டலடிக்கும் வகையில் கேள்வி கேட்கவும், கோவத்தின் உச்சிக்கே சென்றது போல் முகத்தை இருக்கமாக வைத்து கொண்ட கோஹ்லி, கடு கடு முகத்துடனே “நான் உங்களுக்கு பதில் அளிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன், உங்களிடம் சண்டை போடுவதற்காக அல்ல” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய விராட் கோஹ்லி, இந்திய மண்ணில் தென் ஆப்ரிக்கா அணி எத்தனை முறை மீண்டு வந்து வெற்றி பெற்றுள்ளது. அதேநிலை தான் தற்போதும் இந்திய அணிக்கும். இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் காரணம். நாட்டுகாகவும் அணிக்காகவும் நான் எதையும் களத்தில் செய்ய தயங்க மாட்டேன். ஆனால் எனது 150 ரன்களால் எந்த பயனும் இல்லை. அணி தோல்வியடையும் போது, சொந்த சாதனைகள் முக்கியமில்லை.
இந்திய அணியை விட தென் ஆப்ரிக்கா அணி, அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குகின்றனர், இந்த வெற்றிக்கு அவர்கள் நிச்சயம் தகுதியானவர்களே என்று தெரிவித்தார்.